பேராசை பிடித்த யோகி பாபு… ரூ. 20 லட்சம் ஏமாற்றி மோசடி – பிரபல தயாரிப்பாளர் கண்ணீர் புகார்!
Author: Shree21 August 2023, 1:12 pm
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் யோகி பாபு தான். ரஜினி, அஜித், விஜய் என முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். ஏராளமான படங்களில் நடித்து வரும் யோகி பாபு, ஒரு படத்தில் ஒரு காட்சியில் ஆவது தோன்றிவிடுவார். இவரின் டைமிங் காமெடிக்காக ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்ப்போது LGM மற்றும் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதற்காக அவர் மற்ற காமெடி நடிகர்களை காட்டிலும் அதிகம் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கிடைத்து வருகிறது. யோகி பாபு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட செய்யாறு பாலு ” ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கைரை ” என்ற கதையாக இன்று தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் இல்லாத பட்சத்தினால் வேறு வழியில்லாமல் யோகி பாபுவின் காமெடி பார்க்கவேண்டிய கட்டாயத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சந்தானமும் போய்ட்டாரு, சூரி போய்ட்டாரு யாருமில்லாததால் யோகி பாபுவின் காமெடி திரையில் பார்க்கும்போது ரசிக்கும்படியாகவோ சிரிப்பை வரவைப்பது போன்றோ இல்லை. மேலும் படத்தில் நடிக்கும்போது நான் தான் ஹீரோ என கூறிவிட்டு அதன் பின்னர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தன் பெயரை சொல்லி விளம்பரப்படுத்தவேண்டாம் என கூறுகிறாராம். இதனால் தயாரிப்பளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து நஷ்டத்தை சந்திப்பதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் யோகிபாபு ரூ. 20 லட்சம் ஏமாற்றிவிட்டதாக தயாரிப்பளார் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஹாசீர் தன்னுடைய “ரூபி பிலிம்ஸ்” என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் GV பிரகாஷ், நடிகர் யோகி பாபுவை வைத்து “ஜாக் டேனியல்” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இதற்காக நடிகர் யோகி பாபுவிற்கு ரூ. 65 லட்சம் சம்பளம் பேசி அதற்காக முன்பணமாக ரூ. 20 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட நடிகர் யோகி பாபு படப்பிடிப்பிற்கே வராமல் காலத்தை இழுத்தடித்து இம்சை படுத்தி வந்தாராம். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோதிபோலும் சரியான முறையில் பதில் அளிக்காமல் ஏமாற்றிவந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் நடிகர் யோகி பாபு மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இச்சம்பவம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.