சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.
அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அண்மையில் “தமிழக வெற்றி கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் நடிகர் விஜய். மிக விரைவில் முழுநேர அரசியலிலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்துள்ள பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன்,
நடிகர் விஜய் மெர்சல் படத்தின் போது தன்னுடைய லெட்டர் பேடில் Jesus Saves என தலைப்பு வைத்து தன்னுடைய முழு பெயர் C. Joseph Vijay என்று குறிப்பிட்டு மெர்சல் படத்திற்கான வெற்றிக்கு நன்றி என கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
அப்போது Jesus Saves என்று அறிக்கை வெளியிட்ட அவர் தற்பொழுது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள அறிக்கையில் Jesus Saves எங்கே சென்றது..? உங்கள் பெயருக்கு முன்னால் இருந்த அந்த Joseph என்பது எங்கே சென்றது..? வெறும் விஜய் என்று மட்டும் குறிப்பிட்டிருப்பது ஏன்? அதுமட்டும் அல்லாமல் அந்த அறிக்கையில் உள்ள புகைப்படத்தில் நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறீர்கள். இது எல்லாம் எதை காட்டுகிறது..? உங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அரசியலுக்குள் வர வேண்டுமா..? அல்லது மதத்தை தூக்கி எறிந்துவிட்டீர்களா? என விமர்சித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.