விஜய் டிவி பிரபல சீரியல் நடிகர் திடீர் தற்கொலை… சோகத்தில் சின்னத்திரை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2023, 1:40 pm

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தினம் தினம் பல்லாயிரகணக்கானோர் தவித்து வருகின்றனர். தொடர்ந்து சமீப காலமாக திரையுலகில் அடுத்தடுத்து பல மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியும் வருகின்றனர்.

கே.விஸ்வநாதன், வாணி ஜெயராம், கஜேந்திரன் என வெள்ளித்திரையில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்து கொண்டு வந்த நிலையில் தற்போது சின்னத்திரையிலும் ஒரு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக பல சீரியல்கள் இல்லத்தரசிகளை கட்டுப் போட்டு வைத்துள்ளது.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘காற்றுக்கென்ன வேலி’. இந்த தொடரானது இளம் நடிகர்களை வைத்து இயக்கப்படுகிறது, அதுவும் கல்லூரியை மையமாக கொண்ட கதையம்சம் என்பதால் இதற்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகம்.

மேலும் கல்லூரியை மையமாக கொண்ட எல்லா கதைகளிலும் இரண்டு கேங் இருப்பது வழக்கம். அதேபோல் இந்த சீரியலிலும் இரண்டு கேங் உண்டு. தில் நாயகி வெண்ணிலாவின் கேங் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இருப்பினும் இப்போது இந்த கேங்கில் இருந்த ஒரு சில நடிகர்கள் சீரியலில் இருந்து விலகி விட்டனர். இவ்வாறான இந்த சீரியலில் நாயகியின் தோழனாக நடித்தவர் தான் ஹரி. இந்த சீரியலில், தமிழ் என்ற பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் ஹரி.

5 ஸ்டார் கேங் என்ற பெயரில், இந்த சீரியலில் பெரிய அளவில் இவர் ரீச் ஆனார். இது போக ஜீ தமிழின் தவமாய் தவமிருந்து சீரியலில் சில காலம் கேமியோ ரோல் செய்தார். இவர் நேற்று திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த திடீர் முடிவை அறிந்த சக நடிகர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர். இவரின் இழப்பிற்கு சின்னத்திரைப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1530

    21

    9