பிரபல சீரியல் நடிகர் திடீரென தற்கொலை.. சோகத்தில் ஆழ்ந்த சீரியல் குடும்பத்தினர்..!!
Author: Babu Lakshmanan17 February 2023, 7:43 pm
பெரும்பாலும் திரைப்படங்களை காட்டிலும் வெள்ளித்திரையான சீரியல்களே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை சீரியல்களில் இடம்பெற்றிருப்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
குறிப்பாக, கதைகளுக்கு ஏற்பட இல்லத்தரசிகளின் விருப்பமான சீரியல்களும் அமையும். ஹீரோயின்கள் மட்டுமல்ல வில்லி கதாபாத்திரங்களுக்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அந்தவகையில், மிகவும் பிரபலமான சீரியல் காற்றுக்கென்ன வேலி என்னும் தொடர்தான்.
கல்லூரி கதையை மையமாகக் கொண்டுள்ள இந்த தொடருக்கு பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் கூட ரசிகர்களாக இருக்கலாம். இந்தத் தொடரில் இரு கதாநாயகிகள் உள்ளனர். காதல் மற்றும் குடும்ப நிகழ்வுகள்தான் இந்தத் தொடரின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.
இந்தத் தொடரில் நாயகிகளின் ஒருவரான வெண்ணிலா என்பவரின் தோழனாக நடித்து பிரபலமானவர் ஹரி. இவர், நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இந்த முடிவுக்கு என்ன காரணம் என தெரியாத நிலையில், வெள்ளித்திரையின் நடிகர் தற்கொலை செய்து கொண்டது சினிமா துறையில் இருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.