வைரமுத்துவின் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அதை செய்வார் – பகீர் கிளப்பிய பிரபலம்!

Author: Shree
28 November 2023, 9:00 am

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள்.

chinmayi - updatenews360

பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர். தொடர்ந்து சின்மயி அவரை விமர்சித்து தான் வருகிறார். ஆனால், வைரமுத்து அதையெல்லாம் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை.

பாடகி சின்மயியை தொடர்ந்து பாடகி புவனா சேஷன் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அதாவது வைரமுத்து வாய்ப்பு கொடுக்கும்போதே அவரின் ஆசைகளுக்கு அடிபணியவேண்டும் என கட்டளைகளை போடுவார். அதையெல்லாம் செய்யவில்லை என்றால், அல்லது உங்கள் வாய்ப்பே தேவையில்லை என கூறி வெளியேறிவிட்டால் அதன் பின்னர் சினிமாவில் எங்குமே பாடமுடியாத அளவிற்கு உங்களை பழிவாங்கிவிடுவார் வைரமுத்து என புவனா சேஷன் கூறியுள்ளது பகீர் கிளப்பியுள்ளது.

  • Ajith kumar Good Bad Ugly Remake of Korean Hit Movie கொரியன் படத்தின் காப்பியா GOOD BAD UGLY.? பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படத்தின் ரீமேக்?