திடீரென காதலியை கரம் பிடித்த இளம் பாடகர்…ஓடி சென்று வாழ்த்திய இளையராஜா…!

Author: Selvan
11 January 2025, 6:00 pm

எளிமையாக நடந்த தெருக்குரல் அறிவு திருமணம்

தமிழ் சினிமாவில் தன்னுடைய பாடல் வரிகள் மூலம் மக்களுக்கு ஆழமான கருத்தை விதைப்பவர் தெருக்குரல் அறிவு.இவருடைய ராப் பாடல்கள் தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அதிகம் கொண்டாடப்படுகிறது.

Arivu marriage at Ambedkar Mandapam

இவர் பெரும்பாலும் மக்களின் ஒடுக்குமுறை மற்றும் சாதிய கொடுமைகளை எதிர்த்து தன்னுடைய பாடல்களை பாடுவார்.மேலும் இவர் பல கமர்சியல் பாடல்களையும் பாடியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் விஜய் கட்சியின் கொள்கை பாடலை இவர் இசையமைத்து பாடியிருந்தார்.

இதையும் படியுங்க: அய்யோ அவரா அப்போ NO…பிரபல நடிகரை புறக்கணித்த சாய் பல்லவி..!

இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய குரல் மூலம் ஆதரவு கொடுத்து வரும் அறிவு,தற்போது அவருடைய நீண்ட நாள் காதலியான கல்பனாவை கரம் பிடித்துள்ளார்.சென்னை டாக்டர் அண்ணா அம்பேத்கர் மணிமண்டபத்தில் எளிமையாக நடைபெற்ற அறிவு திருமணத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளன் மற்றும் பிரபல இயசையமைப்பாளரான இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Therukural Arivu marriage photos

தற்போது அறிவின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி,ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!