குடிபோதையில் அதிகாரி கன்னத்தில் அறைவிட்டு அட்டகாசம்.. பின்னணி பாடகர் கைது..!

Author: Vignesh
13 May 2024, 5:00 pm

கோலிவுட் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவராக திகழ்வர் வேல்முருகன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தற்போது, மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த விஷயமே. அந்த பகுதியில், மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், வேல்முருகன் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிக்கும் வேல்முருகனுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த வாக்குவாதத்தின் போது அந்த அதிகாரியை ஆபாசமாக திட்டியதோடு பாடகர் வேல்முருகன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

velmurugan

மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)

இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் பாடகர் வேல்முருகனை இன்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பார்த்த, பலரும் என்னதான் பெரிய பாடகராக இருந்தாலும், குடிபோதையில் அதிகாரி கன்னத்தில் அறைவிட்டு அட்டகாசம் செய்திருக்கக் கூடாது என்று கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க: செய்வினை வெச்சாங்க.. கை முழுக்க இரத்த கீறல்கள்.. பகீர் கிளப்பிய 90ஸ் நாயகி மோகினி..!(Video)

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி