பிரபல தமிழ் நடிகரின் மகள் பாஜகவில் இணைகிறாரா? அவரே சொன்ன உண்மை!
சினிமாவை பொறுத்தவரை பிரபலங்கள் பலர் அரசியலுக்குள் நுழைந்து கோலோச்சி பல பதவிகளில் அமர்ந்தனர், அமர்ந்துள்ளனர். அப்படி சினிமா எத்தனையோ கலைஞர்களை வளர்த்துவிட்டுள்ளது.
ஆனால் சினிமாவில் என்ட்ரி ஆகாமல் நடிகரின் வாரிசு என்ற அந்தஸ்து உள்ள ஒருவரை பாஜக அரசியலுக்கு அழைத்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அவர் வேறு யாரும் இல்லை. புரட்சி தமிழன் என அழைக்கப்படும் நடிகர் சத்யராஜின் மகள்தான். இவர் சினிமாவில் தலைக்காட்டாமல், ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.
சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில, சத்யராஜின் மகள் திவ்யா, சினிமாவில் நாட்டம் இல்லாமல் மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் மூலம் தமிழ்நாட்டில் வறுக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கிவருகிறார்.
சினிமா பக்கம் தலைக்காட்டாத திவ்யா சத்யராஜ் அண்மையில் அரசியலில் குதிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இது குறித்து அவரே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வணக்கம் எனக்கு அரசியல் ஆர்வம் உண்டு என சில பத்திரிகை நண்பர்களிடம் கூறியிருந்தேன், அதற்கு பிறகு எல்லோம் என்னிடம், நீங்கள் எம்பி ஆக அரசியலுக்குள் நுழைகிறர்கள், மாநிலங்களவை எம்பி ஆக ஆசை இருக்கா? இல்லை மந்திரி பதவிக்கா என பல கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன.
நான் பதவிக்காக, தேர்தலில் வெல்வதற்காக அரசியலுக்கு வர நினைக்கவில்லை, மக்களுக்கு சேவை செய்யவே வரவேண்டும் என நினைக்கிறேன்.
நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதில்லை, வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியில் இருந்து அழைப்பது வந்தது, ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியுடனும் எனக்கு இணையவிருப்பம் இல்லை, எந்தக் கட்சியுடன் இணைப் போகிறேன் என்பது தேர்தல் முடிந்த உடன் அறிவிப்பேன், நிச்சயம் தோழர் சத்யராஜ் மகளாகவும், தமிழ் மகளாகவும், தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன் என கூறியுள்ளார்.
மதம் சார்ந்த கட்சி தன்னை அரசியலுக்கு அழைத்ததாக திவ்யா கூறியுள்ளதால், அது நிச்சயம் பாஜக தான் என கருத்து தெரிவித்து வருகின்றனர். அது எந்த கட்சி என்று பொருத்திருந்து பார்க்கலாம்
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
This website uses cookies.