கீர்த்தி சுரேஷை வீடு தேடி பெண் கேட்ட பிரபல நடிகர் : உண்மையை உடைத்த இயக்குநர்!
Author: Udayachandran RadhaKrishnan3 December 2024, 12:08 pm
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது பாலிவுட்டில் பேபி ஜான் படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார்.
தெலுங்கில் மகாநதி படத்தில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறில் தத்ரூபமாக அவரை போலவே நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்றார்.
இங்கு அமைதியாக அடக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், பாலிவட்டில் என்ட்ரி கொடுத்ததும் கவர்ச்சியை காட்ட ஆரம்பித்துள்ளார்.
இதையும் படியுங்க: இந்திரா காந்திக்கு அதிர்ச்சி கொடுத்த சில்க் ஸ்மிதா.. மிரட்டி விட்ட BIOPIC வீடியோ!
இந்தநிலையில் அவருக்கும் டிசம்பர் மாதம் கோவாவில் 15 வருடமாக காதலித்த ஆண்டனியுடன் திருமணம் நடைபெற உள்ளது.
கீர்த்தி சுரேஷை பெண் கேட்ட விஷால்
இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷை வீடு தேடி நடிகர் பெண் கேட்டுள்ள தகவல் ஒன்று பரவி வருகிறது. சண்டக் கோழி 2 படத்தில் நடித்தத போது விஷாலுடன் கீர்த்தி நடிப்பதை பார்த்த அவரது பெற்றோர்கள், விஷாலுக்கு இவர் சரியான பொருத்தம் என முடிவு சேய்து பெண் கேட்க முடிவெடுத்தனர்.
கீர்த்திக்கு பழக்கமான இயக்குநர் லிங்குசாமியிடம் விஷயத்தை பேசி தூதி அனுப்பியுள்ளனர். பின்னர் தான் தெரிந்தது, கீர்த்தி சுரேஷ் ஒருவரை காதலித்து வருவதாக கூறி விஷால் தரப்பினருக்கு பதில் அனுப்பியுள்ளனர்.
இந்த விஷயத்தை தற்போது தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.