பிரபல நடிகருக்கு டாக்டர் பட்டம்…குவியும் பாராட்டுக்கள்…!

Author: Selvan
1 December 2024, 6:48 pm

எஸ்.ஜே.சூர்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

தமிழ் சினிமாவில் பல நடிகர்,நடிகைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளார்கள்.அந்தவரிசையில் இயக்குனர்,தயாரிப்பாளர்,நடிகர்,கதை ஆசிரியர் என பல முகங்களை கொண்டு நடிப்பு அசுரனாக கலக்கி வருபவர் எஸ்.ஜே. சூர்யா.

Doctorate for Tamil actor SJ Surya

இவருக்கு பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தற்போது டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் எஸ் ஜே சூர்யா.இவர் தமிழில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த நேருக்கு நேர் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

இதையும் படியுங்க: நானும் ரவுடி தான் படத்தை பார்த்து அஜித் சொன்ன விஷயம்…பார்த்திபன் வெளியிட்ட பதிவு..!

பின்பு அன்பே ஆருயிரே,வியாபாரி,நண்பன்,மெர்சல்,மாநாடு உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார்

இவர் மார்க் ஆண்டனி திரைப்படத்தில்,தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றார்.

Vel's University awards Doctorate to SJ Surya

தற்போது விக்ரமுடன் வீர தீர சூரா திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.இப்பிடி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளார்கள்.

  • Keerthy Suresh viral photos in baby john movie கழுத்தில் தாலியுடன் மேடையில் கவர்ச்சி…சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் புகைப்படம்…!
  • Views: - 81

    0

    0