மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர் :10 வருட இடைவெளிக்கு பிறகு எடுத்த திடீர் முடிவு…!

Author: Selvan
3 December 2024, 9:56 pm

இயக்குநராக சூர்யாவின் புதிய பயணம்

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பிற்கு பிரபலம் ஆனவர் எஸ். ஜே. சூர்யா.கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக திரும்பியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் இசை என்ற படத்தை இயக்கி நடித்திருந்த அவர்,தற்போது இயக்குநராக மீண்டும் களம் இறங்கியுள்ளதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர் .

S. J. Surya new directorial journey

எஸ் ஜே சூர்யாவின் மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியைக் கண்ட பிறகு, தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் நடிப்பு முறை காரணமாக தென்னிந்திய சினிமா ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என்று போற்றப்பட்டார்,இவருக்கு அடுத்தடுத்து புது புது வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.

இதையும் படியுங்க: 100 கோடி வசூலை அள்ளிய புஷ்பா 2 ..டிக்கெட் முன்பதிவில் புது சாதனை..!

எஸ்.ஜே.சூர்யா சாட்டர்டே என்ற படத்தில் வில்லனாக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார்.இவர் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்த பிறகு, புதிய படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். இந்த புதிய படத்திற்கு கில்லர் என பெயர் சூட்டியுள்ளார்.படம் பற்றிய முக்கியமான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

S. J. Surya KILLER movie

எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்,என்பது குறிப்பிடத்தக்கது.

  • Rakul Preet Singh Admitted in Hospital படுத்த படுக்கையில் பிரபல நடிகை… 6 வாரங்களாக ஐசியூவில் சிகிச்சை..!!!
  • Views: - 32

    0

    0

    Leave a Reply