விவாகரத்திற்கு பிறகு தனுஷ் சொன்ன விஷயம் இதுதான்: ரகசியத்தை போட்டுடைத்த செல்வராகவன்..!

Author: Rajesh
5 March 2023, 11:00 am

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதனைத் தொடர்ந்து, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, NGK, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற வித்தியாசமான திரைக்கதைகளை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.

பீஸ்ட், சாணி காயிதம், நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ஒரு படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இவ்வாறு இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தொடர்ந்து தன் திறமையை நிரூபித்து வரும் செல்வராகவன் நடித்த பகாசூரன் திரைப்படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

selvaraghavan updatenews360

பகாசூரன் பட புரோமோஷனுக்காக செல்வராகவன் நிறைய பேட்டிகளில் பங்கேற்று வந்தார். அப்போது ஒரு பேட்டியில், எனக்கு சோனியாக அகர்வாலுடன் விவாகரத்து ஆன போது, தனுஷ் என்னிடம், இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டாம், கடவுள் உனக்கு நல்ல வாய்ப்பை கொடுத்திருகிறார்.

இப்படியே “சிங்கிளாகவே” வாழ்நாள் முழுவதும் இருந்து விடு என கூறினார். ஆனால் கீதாஞ்சலி மீது இருந்த நம்பிக்கையால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். அவர் என் வாழ்க்கையை அழகாக மாற்றிவிட்டார் என கூறியிருக்கிறார் செல்வராகவன்.

சில படங்களில் ஒன்றாக பணியாற்றித்தன் மூலம் காதலித்து சோனியா அகர்வால் – செல்வராகவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின் கீதாஞ்சலியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 736

    9

    5