இவர நடிக்க வைக்க ஆசைப்பட்டேன்; நோ சொல்லிட்டாரு; அதுவும் இப்படி ஒரு கேரக்டர் கிடைக்குமா?வருத்தத்தில் இயக்குனர்,..

Author: Sudha
24 July 2024, 12:18 pm

நடிகர் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர் நடிகர் சமுத்திரக்கனி. இயக்குனராகவும் பல வெற்றிப்படங்களை தந்திருக்கிறார். சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் சமுத்திரகனி.

சமீபத்தில் சமுத்திரக்கனி ஒரு பேட்டி அளித்திருந்தார் அதில் கமல்ஹாசன் சாருக்கு நான் பெரிய ரசிகன். நான் ஆபரேட்டராக வேலை பார்த்த போது வாழ்வே மாயம் படத்தைத்தான் அதிகமுறை ஓட்டி இருக்கிறேன்.

கமல் சார் நடித்ததில் அன்பே சிவம், ஹே ராம் படங்கள் மிகவும் பிடிக்கும். இந்தியன் முதல் பாகத்தில் ஒரு சைடு ஆர்ட்டிஸ்டாகவாவது நடிக்க ஆசைப்பட்டு போனேன். ஆனால் அப்போது என்னை கண்டுகொள்ளவில்லை. வாய்ப்பும் தரப்படவில்லை.இதை மனதில் வைத்து எனக்காகவே இந்தியன் 2வில் எனது கேரக்டரை ஷங்கர் சார் எழுதியதாக கேள்விப்பட்டேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கமல் சாரை ஹீரோவாக வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா இயக்குனர்களுக்கும் உண்டு. எனக்கும் அந்த ஆசை இருந்தது.வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவலை அவரை வைத்து இயக்க ஆசைப்பட்டேன். கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலில் வரும் ‛மொக்கை நாயக்கர்’ கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தது அதனால் கமல்ஹாசனை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன்.கமல் சாரை நேரடியாக மீட் பண்ணி அந்த நாவலை கொடுத்துவிட்டு எனது ஆசையையும் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் கமல் சார் எந்த பதிலும் சொல்லவில்லை. அதனால் என்ன செய்வது என்று அப்படியே விட்டு விட்டேன் என தன் ஆசை பற்றி பகிர்ந்திருக்கிறார்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!