பிச்சைக்கார்களுடன் பிளாட்பாரத்தில் படுக்க வைத்த பிரபல தமிழ் பட இயக்குநர்: டென்ஷன் ஆன அஞ்சலி..!

Author: Rajesh
9 July 2023, 1:00 pm

இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக 2007ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பின்னர், இவர் நடித்த ‘அங்காடி தெரு’ படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

anjali-updatenews360

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. தமிழில், சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டிவிட்டு ஐதராபாத்’ல் செட்டில் ஆனார். சிறிய இடைவெளிக்கு பின்னர் சிங்கம் 2 படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டும் குத்தாட்டம் போட்டார்.

பின்னர், நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கிய அஞ்சலி, நாடோடிகள் 2 படத்தில் நடித்தார். தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கிய நிலையில், ‘பாவக்கதைகள்’ ‘நிசப்தம்’, ‘நவரசா’ உள்ளிட்ட சீரிஸ்களில் நடித்து வந்த நிலையில், அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில், போட்டோக்கள், வீடியோக்கள் என அப்லோட் செய்து வருகிறார்.

anjali-updatenews360

இந்நிலையில், அங்காடி தெரு படத்தின் போது அஞ்சலி அனுபவித்த கஷ்டம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வசந்த் பாலன் இயக்கத்தில் அங்காடி திரைப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடித்திருந்தார். இந்த படத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவரும் பெண்கள் எவ்வாறெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பது தான் கதை. இப்படத்தில் அஞ்சலியின் பெரிதும் பேசப்பட்டது, கிளைமாக்ஸ்ல் இவருடைய காட்சி பார்ப்போரையே கலங்க வைத்துவிட்டது. இதற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருதும் கிடைத்தது.

படப்பிடிப்பு தொடங்கி நாட்கள் செல்ல செல்ல இயக்குனர் வசந்த் பாலன் படபிடிப்பில் செய்யும் விஷயங்கள் சிலது அஞ்சலிக்கு பிடிக்காமல் போனது. குறிப்பாக பிச்சைக்காரர்களுடன் சாலையில் படுக்க வைத்து அவர் எடுத்த காட்சிகள் பிடிக்கவில்லை என வருந்தியுள்ளார். இதனால் இவர் இயக்குனர் மீது கோபம் கொண்டுள்ளார். ஆனால், படம் வெளியான பிறகு அந்த சீன்களை பார்த்து அவர் மனம் மாறிவிட்டாராம். இப்படம் அஞ்சலி திரை வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 437

    1

    0