மருத்துவமனையில் பிரபல தமிழ் வில்லன் நடிகர் : ஓடி வந்து உதவிய சினிமா பிரபலங்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 9:02 pm

பிரபல வில்லன் நடிகருக்கு உடல்நலக்குறைவு என தெரிந்தததும் தமிழ் சினிமா பிரபலங்கள் ஓடி வந்து உதவியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக அறியப்பட்ட பொன்னம்பலம், பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நாட்டாமை படம் இவரின் வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் மேற்கொண்டார். பின்பு 2021 ஆம் ஆண்டு சிறுநீரகப் பாதிப்பு மோசமடைந்தது. அதனால் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து பின்பு வீடு திரும்பினார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலம், கடந்த 6 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு அவரது அக்கா மகன் ஜெகன்நாதன் என்பவர் தனது சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், பொன்னம்பலம் தனக்கு உதவிய அனைவருக்கும், மக்களின் அன்புக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

ஜெகன்நாதனுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு உதவி செய்த சிரஞ்சீவி, கமல்ஹாசன், சரத்குமார், தனுஷ், கே.எஸ்.ரவிகுமார், அர்ஜூன், பிரகாஷ் ராஜ், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், விஜய் சேதுபதி, பவன், மத்திய அமைச்சர் எல்.முருகன், நண்பரும் தொழிலதிபருமான பாலா, வழக்கறிஞர் கோபால், செந்தில்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!