‘பலாப்பழம்’ வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய பிரபல வில்லன் நடிகர் : படப்பிடிப்பில் உற்சாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 4:45 pm

தன் பிறந்தநாளை கண்ட கண்ட ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி, விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த உண்மையான ‘தமிழ் தேசிய மாடல்’ என பிரபல வில்லன் நடிகரை புகழ்ந்து வருகின்றனர்.

பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் “சரக்கு”. இந்த படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை முன்னிட்டு பலாப்பழம் வெட்டி, படக்குழுவினர்களோடு கொண்டாடினார்.

‘சரக்கு’ படத்தில் மன்சூர் அலிகான் ஜோடியாக வலினா நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், சேசு, கென்ஸ்லி, யோகி பாலா மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

இயக்கம் ஜே.ஜெயக்குமார், ஒளிப்பதிவு அருள் வின்சென்ட், இசை சித்தார்த் விபின், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ் உட்பட பலர் குழுவில் உள்ளனர்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!