அஜித்தை அவமானப்படுத்திய இயக்குனர் – காத்திருந்து பதிலடி கொடுத்த அஜித் – என்ன செய்தார் தெரியுமா?

Author:
2 October 2024, 12:06 pm

தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோவாகவும் நட்சத்திர அந்தஸ்தையும் பிடித்திருக்கும் நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ரிலீசுக்கு தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அஜித் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதாவது அஜித் தன்னுடைய வாழ்க்கையில் வளர்ந்து வந்த சமயம் அது. அந்த சமயத்தில் நடிகராக வேண்டும்… உச்ச நட்சத்திரமாக வேண்டும் என்ற முயற்சித்துக் கொண்டிருந்த சமயத்தில் பல பெருத்த அவமானங்களை அஜித் சந்தித்திருக்கிறார் .

ajith

ஆம்,அப்படித்தான் ஒரு பிரபலமான பெரிய இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க வேண்டும் என அஜித் ரொம்பவே ஆசைப்பட்டாராம். அப்படித்தான் அந்த இயக்குனரின் பிறந்தநாள் வந்துள்ளது. இயக்குனரின் பிறந்தநாளோ பெரிய ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஏற்பாடு செய்து பல நட்சத்திர பிரபலங்கள் பங்கேற்று கொண்டாடிக் கொண்டிருந்தார்களாம்.

அந்த சமயத்தில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லலாமே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்த அஜித் அந்த ஹோட்டலுக்கு சென்று வெளியே நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தாராம். அஜித் காத்திருந்தது அந்த இயக்குனருக்கு தெரிந்தும் தன்னுடைய உதவி இயக்குனரை அனுப்பி வைத்து டைரக்டர் சார் இப்போ பிஸியா இருக்காங்க பிறகு பார்த்துக் கொள்ளலாம் போங்க என்று சொல்லி அனுப்பி விட்டாராம்.

ajith

இதனால் கடுப்பின் உச்சத்திற்கு ஆளான அஜித் காலம் ஒருநாள் பதில் சொல்லும்… எனக்கும் காலம் வரும் என காத்திருந்து காலப்போக்கில் மிகப்பெரிய ஸ்டார் நட்சத்திர நடிகராக உயர்ந்தார். பின்னர் இயக்குனர் அஜித்தை வைத்து எப்படியாவது ஒரு படம் பண்ண வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்தும் அது நடைபெறாமல் போனது .

இதையும் படியுங்கள்: அந்த நடிகர் என்னுடைய B***…. முன்னாள் காதலர் பற்றி கூச்சமில்லாமல் கூறிய தீபிகா படுகோன்!

கடைசி வரை அஜித் அந்த இயக்குனரோடு சேர்ந்து பணியாற்றவே இல்லை. இதனை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனியார் YouTube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவரது இந்த பேட்டியை பார்த்து ரசிகர்கள் யார் அந்த இயக்குனர் என ஆளாளுக்கு யூகித்துக் கமெண்ட் செய்து விமர்சித்து வருகிறார்கள். அவர் யார் என்று. உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் கருத்து தெரிவிக்கலாம்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!