பிரபல நடிகர் மீது தீரா காதல்…72 கோடி சொத்தை உயில் எழுதிய தீவிர ரசிகை…
Author: Selvan11 February 2025, 8:19 pm
சஞ்சய் தத் மீது தீரா காதலில் இருந்த பெண் ரசிகை
மும்பையை சேர்ந்த பெண்மணி ஒருவர் பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் மீது தீரா காதலால்,தன்னுடைய 72 கோடி சொத்தை அவருக்கு எழுதி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சினிமா ஆரம்பித்த கால கட்டத்தில் இருந்து நடிகர்கள் மீது ரசிகர்கள் அதிக அன்பை காட்டி வருகின்றனர்,சில நடிகர்களுக்கு தற்போது கோவில் எல்லாம் கட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்க: விஜயின் ‘லியோ’ மலையாள சினிமாவை கெடுத்து விட்டது…பிரபல நடிகர் பகீர்..!
மேலும் தங்களுக்கு பிடிச்ச நடிகர்களின் படம் வரும் போது பால் அபிஷேகம்,கட் அவுட் அடித்து,மேள தாளங்கள் போட்டு கொண்டாடி வருகின்றனர்,சிலர் அந்த நடிகர்களில் பிறந்த நாள் அன்று தங்களால் முடிந்த உதவிகளை பொது மக்களுக்கு செய்து வருவார்கள்,ஆனால் மும்பையை சேர்ந்த நிஷா படேல் என்ற பெண் ஒருவர்,பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்-க்கு தான் தன்னுடைய சொத்தை உயில் எழுதி,உயிரிழந்த சம்பவம் வெளியாகியுள்ளது.
சஞ்சய் தத் கிட்டத்தட்ட 135 படங்களுக்கு மேல் நடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்,சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்,இவருக்கு ஆரம்பம் முதலே பெண் ரசிகைகள் ஏராளம்,அந்த வகையில் நிஷா படேல்,சஞ்சய் தத் தான் தன்னுடைய உயிர்,உலகம் என இருந்துள்ளார்,திருமணம் செய்தால்,அவரே தான் பண்ணுவேன் என காலம் முழுவதும் கல்யாணம் செய்யாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் 2018 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்,அப்போது சஞ்சய் தத்-க்கு போன் செய்த மும்பை போலீசார்,நிஷா படேல் என்ற பெண் அவுங்களுடைய 72 கோடி சொத்தை உங்களுக்கு எழுதி வைத்துள்ளார் என கூறியுள்ளார்கள்,இதனை கேட்ட நடிகர் சஞ்சய் தத் ஷாக் ஆகி,தனது வழக்கறிஞர் மூலம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் நிஷா படேல் என்னுடைய ரசிகை என்பதில் நான் பெருமை அடைகிறேன்,ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இருந்தது இல்லை,அவருடைய சொத்துக்களை நான் ஏற்க மாட்டேன்,அவருடைய இறப்பிற்கு என்னுடைய இரங்கல் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.இதுவரை வெளிவராத இந்த ரகசிய தகவல்,தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவருகிறது