“பாக்கியலட்சுமி” கோபிக்கு சூனியம் வைத்த பெண்… வீட்டு வாசலில் திடுக்கிடும் சம்பவம்!

Author:
26 July 2024, 3:24 pm

TRP -யில் நம்பர் 1 இடத்தில் உச்சத்தை தொட்டு மக்கள் எல்லோருக்கும் பிடித்தமான சீரியலாக பார்க்கப்பட்டு பிடித்திருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நாடகத்தில் சுசித்ரா செட்டி என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.

மேலும் சதீஷ் கோபிநாத் ஆக நடித்திருக்கிறார். இதில் சதீஷ் என்ற பெயரை சொல்வதை விட கோபிநாத் என்று சொன்னவுடன் தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு இந்த சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகர் சதீஷ் என்கிற கோபிநாத்.

ஆரம்பத்தில் இருந்தே கோபி தனது மனைவியான பாக்கியவிடம் எந்த ஒரு ஆசையும் இல்லாதவராக அவரிடம் எரிந்து எரிந்து விடுவார். மேலும் பாக்யாவை விட்டுவிட்டு ராதிகா என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொள்வார். இதையடுத்து பாக்கியா சொந்த உழைப்பில் முன்னேறி வருவார். இப்படியான சமயத்தில் ராதிகா கர்ப்பம் ஆகிறார். அந்த சமயத்தில் கால் தடுமாறி கீழே விழ அந்த கர்ப்பம் கலைந்து போகிறது.

இதனால் கோபம் அடைந்த ராதிகா கோபியின் அம்மாவான ஈஸ்வரியை திட்ட கோபி தன் அம்மா ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவார். இப்படி இந்த சீரியலில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்பட தொடர்ந்து அடுத்தடுத்து கோபி மோசமான நபராக சீரியலில் காட்டப்படுவார்.

இதனால் கோபத்தில் கொந்தளித்த பெண் ரசிகை ஒருவர் கோபியின் வீட்டு எதிரே வந்து நின்று எலுமிச்சை பழத்தை வைத்துக்கொண்டு சூனியம் வைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தாராம். இதனால் பயந்து போன கோபி போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் சீரியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 161

    0

    0