அச்சு அசல் இயக்குனர் வெற்றிமாறன் மாதிரியே இருக்கீங்க.. போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்..!
Author: Vignesh1 June 2023, 12:00 pm
விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அத்தனை பத்மாவும் சரித்திர வெற்றி படைத்தது என்றல் எது இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படங்கள் தான். பொல்லாதவன் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.
தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். சமீபத்தில் இவர் இயக்கி வெளியான திரைப்படம் தான் விடுதலை. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இப்படத்தில் காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் போலவே மேக்கப் போட்டுக்கொண்டு ரசிகர் ஒருவர் மாறியுள்ளார். இதை பார்த்த பலரும், அச்சு அசல் அப்படியே வெற்றிமாறன் போலவே இருக்கிறாரே இவர் என கூறி வருகிறார்கள்.