மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.
தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 9 ஸ்கின் என்ற சருமம் சார்ந்த products தொழில் ஒன்றை ஆரம்பித்தார். பின்னர் நாப்கின் தொழிலை ஆரம்பித்தார்.
திரைப்படங்களில் நடித்துக்கொண்டே தொழிலில் படுபிஸியாக வேலை செய்து வரும் நயன்தாரா மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்துள்ளார். ஆனால், அதில் கூட தனது பிசினஸ் பிராண்டை விளம்பரப்படுத்தும் வகையில் உணவு, குடிநீர் மற்றும் தன்னுடைய பெமி9 கம்பெனி பிராண்டின் நாப்கின் உள்ளிட்டவைற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார். அதை தன்னுடைய பிராண்ட் பெயர் ஒட்டிய வண்டியில் கொண்டுவந்து இறக்குமதி செய்து அந்த நேரத்திலும் பிசினஸ் செய்துள்ளதை சிலர் விமர்சித்து இருந்தனர்.
மக்கள் கஷ்டப்படும் போது கூட தன் கம்பெனி பொருளை இலவசமாக கொடுத்ததோடு, அதை போட்டோ எடுத்து மலிவு விளம்பரம் செய்ததாக கடுமையான விமர்சனங்களும் நயன்தாரா மீது எழுந்துள்ளது. தற்போது, கிறிஸ்துமஸ் வாழ்த்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூற, அதோடு தன் பெமி9 கம்பெனி பொருளை விளம்பரம் செய்துள்ளார். அதற்கு ரசிகர்கள் தற்போது, கூட காசு தான் முக்கியமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
This website uses cookies.