முதல்ல நீங்க திருந்துங்க… அப்புறம் ஊருக்கு உபதேசம் பண்ணலாம்.. விஜய்யை கண்டித்த நெட்டிசன்கள்..!

Author: Vignesh
7 March 2024, 11:25 am

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், விஜய் கைவசம் இருக்கும் படத்தில் மட்டும் நடித்து சினிமாவிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. அதாவது, அரசியல் கட்சி தொடங்கிய விஜய் தமிழக வெற்றிக்கழகம் என தொடங்கியிருந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் தான் அரசியலில் குதிக்க உள்ளதாக கூறினார்.

சமீபத்தில், ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கியது பாண்டிச்சேரியில், ஒன்பது வயது சிறுமிக்கு நடந்த கொடுமை இதற்கு விஜய் கண்டனம் தெரிவிக்க நெட்டிசன்கள் முதலில் நீங்க படத்தை ஒழுங்கா எடுங்க குடிப்பது புகைபிடிப்பது போன்ற காட்சிகளை நீங்களே லியோ படத்தில் பயன்படுத்தினீர்கள். உங்கள் ரசிகர்கள் பெரும்பாலும் வளரும் இளைஞர்கள் நீங்கள் திருந்துங்கள், அதுக்கப்புறம் ஊருக்கு உபதேசம் செய்யலாம் என்று கடுமையாக சாடி வருகின்றனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!