“நீங்க சொல்றது பார்த்தா எல்லாமே உல்ட்டாவா இருக்கு”… தன்னை பற்றிய ரகசியம் உடைத்த சிம்ரன்!

Author: Rajesh
23 January 2024, 4:57 pm

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.

simran

1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

பின்னர் தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சிம்ரன் பேட்டி ஒன்றில் தனது பெயரின் அர்த்தம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது, சிம்ரன் என்ற பெயர் வடநாடுகளில் ரொம்ப பழசு தான். அங்கு நிறைய பெண்கள் இந்த பெயரில் இருக்கிறார்கள்.

simran

ஆனால், தமிழ்நாட்டில் தான் இந்த பெயர் புதுசு. அது தான் என்னை மக்களிடையே பிரபலமாக்கவும் உதவியது. காரணம் இங்கு என் பெயர் தனித்துவமாக இருப்பதாக தமிழ் மக்கள் உணர்ந்தார்கள் என்றார். சரி ” சிம்ரன்” என்ற பெயரின் அர்த்தம் என்ன? என கேட்டதற்கு, “தியானம், அமைதி” என்றார். இதை கேட்டதும் ரசிகர்கள் ஆட்டம் ஆடியே பலரது மனதை ஆட்டிப்படைத்த உங்களுக்கு இப்படி ஒரு பெயரா? இந்த பெயருக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என கருத்து கூறி வருகிறார்கள்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…