காது கேட்கலயா தலைவா… ரஜினி வீட்டு முன் தொண்டை தண்ணி வற்ற கத்தி கூப்பாடு போடும் ரசிகர்கள்!

Author: Rajesh
12 December 2023, 4:46 pm

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதே நின்றுவிடும் இப்போது நன்றியுடன் என நினைத்தார்கள் ஆனால், 40 வருடத்தை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

ரசிகர்களின் வாழ்த்தும் கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என ரஜினிகாந்த் சந்தோஷமாக கூறி வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி அன்று ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி 73 வது பிறந்த நாளை ஒட்டி அவரது மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

அந்த வகையில், இந்தாண்டும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நள்ளிரவில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் தலைமையில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்கள். மேலும் முன்னணி சமூகவலைதளங்களான பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராமில் Thalaivar 170, SuperStar Rajinikanth, HBD SuperStar Rajinikanth போன்ற ஹாஷ்டேக்களை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அத்துடன் ரஜினியை நேரில் பார்த்து வாழ்த்தவேண்டும் என நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரின் வீட்டு முன்பு கூடி “எங்கள் குல சாமியே… நாங்கள் வழிபடும் சிவனே…சிவாஜி ராவே.. என்றெல்லாம் கத்தி கூப்பாடு போட்டு வருகின்றனர். உணர்ச்சிவசத்தின் உச்சகட்டமாக ” தலைவா…. நாங்கள் அழைப்பது காது கேட்கவில்லையா? என கோஷமிட்டு வருகின்றனர். ரஜினி வீட்டில் இல்லாதது தெரிந்தும் இந்த தீவிர ரசிகர்களுக்காக தலைவர் ஒரு தரிசனத்தை கொடுத்தால் என்ன என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!