புன்னழகை அரசி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை சினேகா 2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. திருமணம், குழந்தை பிறப்பிற்கு பிறகு சில ஆண்டுகள் பிரேக் விட்டிருந்த சினேகா பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
மேலும் படிக்க: கல்யாணம் செய்யாமல் இளமையை கடந்த கோவை சரளா.. யார் காரணம் தெரியுமா?..
கிடைக்கும் ரோல்களில் நடித்து ஸ்கோர் செய்து வருகிறார். தற்போது தளபதி 68 படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இதனிடையே ” ஸ்நேகாலயாஸ் சில்க்ஸ்” என்ற பெயரில் புதிய பிசினஸ் ஒன்றை துவங்கியுள்ளார். அதன் விளம்பர ஷூட்டிங்கில் கணவர் பிரசன்னாவுடன் சேர்ந்து ரொமான்டிக் போஸ் கொடுத்த அழகிய ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி அதனை ரசிகர்களையும் கவர்ந்துள்ளது அதிலும் ” பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்” பாடல் இந்த ரியல் ஜோடிக்கு பக்காவாக பொருந்துகிறது என ரசிகர்கள் கூறி வந்தனர்.
மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!
இந்த நிலையில், பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த சினேகா தற்போது, ஜீ தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று உள்ளார். அதில், அவருடன் பாபா பாஸ்கர், நடிகை சங்கீதா கிருஷ், ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். கடந்த வார எபிசோடில், நாகராஜ் என்ற போட்டியாளர் சிறப்பாக நடனமாடி நடுவர்களின் பாராட்டுகளை பெற்றார். அப்போது, நாகராஜ் சினேகா மேடம் உங்களுடன் ஒரு முறை டான்ஸ் ஆட வேண்டும் என்று சொன்னார். அதற்கு, சினேகா உடனே ஓகே சொல்லி இருக்கிறார்.
உடனே நாகராஜ் உடன் தங்கத்தாமரை மகளே பாட்டுக்கு சினேகாவை கட்டிப்பிடித்து இடுப்பில் கையை வைத்து அவருடன் மிக நெருக்கமாக நடனமாடியுள்ளார். இப்படி சினேகாவுடன் மிகவும் நெருக்கமாக நடனமாடியதை பார்த்த ரசிகர்கள் பொறாமையில் திட்டி தீர்த்து வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.