விஜய் வருகையால் ஸ்தம்பித்த விமான நிலையம்.. இப்படியொரு வெறித்தனமான ரசிகர்களா?(வீடியோ)

Author: Vignesh
18 March 2024, 6:04 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

Goat vijay

தற்போது, விஜய் நடித்துவரும் கோட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைப்பெறும் என்று முன்போ அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திருவனந்தபுரத்தில், உள்ள கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, விஜய் கேரளா வருகிறார் என்பது அங்குள்ள ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்ட, செய்தியாக அமைந்தது. படப்பிடிப்பதற்காக விஜய் கேரளா சென்ற செய்தி வைரலாக பரவியதை அடுத்து, அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடினர். ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசரும் திணறி வந்தனர். அது மட்டும் இன்றி படப்பிடிப்பு நடைபெறும் திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்திலும் ஏராளமான ரசிகர்கள் கூடி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 203

    0

    0