என்னடா இது.. பிரபாஸுக்கு வந்த சோதனை.. ‘இப்படி படம் எடுத்து வச்சிருக்கீங்க’..! ட்ரோல் மெட்டீரியலாக மாறிய “ஆதிபுருஷ்” டீசர்..!
Author: Vignesh3 October 2022, 2:30 pm
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
பாகுபலி படம் மூலம் உலகமெங்கும் பேமஸ் ஆனவர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாஹோ மற்றும் ராதே ஷியாம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. இருப்பினும் அவர் அடுத்தடுத்து நடிக்கும் பிரம்மாண்ட படங்கள் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் இருந்து வந்தது.
அந்த வகையில் பிரபாஸ் கைவசம் தற்போது ஆதிபுருஷ், சலார், ஸ்பிரிட், புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஆதிபுருஷ் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக இப்படம் வெளிவர உள்ளது.

ஆதிபுருஷ் படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ராமராக பிரபாஸும், சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக சையிஃப் அலிகானும் நடித்துள்ளனர்.
நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதற்காக ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த டீசர் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. அதற்கு காரணம் இந்த படம் மோஷன் கேப்சர் முறையில் எடுக்கபட்டுள்ளது தான். தமிழில் ரஜினியின் கோச்சடையான் படம் இவ்வாறு தான் எடுக்கப்பட்டு இருந்தது. ஆதிபுருஷ் டீசர் தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்னடா இது 500 கோடில பொம்ம படம் எடுத்து வச்சிருக்கீங்க என கிண்டலடித்து வருகின்றனர்.