World Tour-அ கொஞ்சம் தள்ளிப்போடக் கூடாதா..? அஜித்தின் செயலால் ரசிகர்கள் வேதனை..!!
Author: Shree20 March 2023, 9:25 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடந்த சில படங்களான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்கள் அவரை அடுத்த கட்டத்திற்கு கூடி சென்றது. கடைசியாக துணிவு படம் வெற்றி கொடுத்தது.
திரைத்துறையில் நடிகர் அஜித்திற்கு போட்டியாளராக பார்க்கப்படுபவர் நடிகர் விஜய். இவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 2016ல் ஒரே நாளில் அஜித்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் அசத்தியது.
இதைத்தொடர்ந்து, 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது கதை மற்றும் வசூல் ரீதியாக துணிவு படமே முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவ்வப்போது வெளியாகும் லியோ அப்டேட்டை பார்த்து அவரது ரசிகர்கள் பூரித்து போய் வருகின்றனர்.
ஆனால், நடிகர் அஜித்குமாரோ, சுற்றுலா செல்வதிலே முழு கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏகே 62 படத்தை கூட அவரசவரசமாக முடிக்க சொல்லி இயக்குனரை டார்ச்சர் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இது அவரது ரசிகர்களிடையே சற்று வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
போட்டியாளரான விஜய் முழுநேரம் படத்தில் கவனம் செலுத்தி நடித்து வரும் நிலையில், நம்ம AK இப்படி வேர்ல்டு டூரில் கவனம் செலுத்தி வருகிறாரே..? என்று ரசிகர்கள் நொந்து போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அடிக்கடி விமான நிலையத்தில் நடிகர் அஜித் வந்து செல்லும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.