உருக்கமாக பேசிய கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்…கண் கலங்கிய ரசிகர்கள்..!

Author: Selvan
20 December 2024, 3:00 pm

சிவராஜ்குமார் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு சமீபத்தில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

அவர் தன்னுடைய மருத்துவ சிகைச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.அங்கே ஒரு மாதம் காலம் தங்கி அறுவை சிகிச்சை முடித்த பின்பு வீடு திரும்ப உள்ளார்.அவர்கூட அவரது மனைவியும்,மகளும் சென்றுள்ளனர்.

Shivrajkumar shares cancer diagnosis

இந்த நிலையில் அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்னால்,பெங்களூரு விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

இதையும் படியுங்க: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி…விராட்கோலி எடுத்த திடீர் முடிவு..!

அதில்,எனக்கு புற்றுநோய் என்று தெரிந்ததும் முதலில் பதற்றமடைந்தேன்,பின்பு மருத்துவர்கள் என்னை பரிசோதித்த பிறகு பயப்பட வேண்டாம்,இதனை குணமாக்க முடியும் என நம்பிக்கை அளித்தனர்.

மேலும்,வரும் டிசம்பர் 24 ஆம் தேதி “மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில்” அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாகவும்,மருத்துவர் முகேஷ் என்ற மனோகர் தான் எனக்கு சிகிச்சை அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில்,திரையுலக பிரபலங்கள்,ரசிகர்கள் என பலர் சிவராஜ்குமார் நலமுடன் சிகிச்சை முடித்து,வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை பண்ணி வருகின்றனர்.

  • Ajith Kumar Vidamuyarchi movie விடாமுயற்சி படத்தில் ட்விஸ்ட்…அஜித்துடன் இணைந்த பிரபல நடிகை..படக்குழு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!
  • Views: - 36

    0

    0

    Leave a Reply