4 மாதத்தில் குழந்தை.. ‘இதே மாதிரி ஃபாஸ்ட்டா படத்தை ரிலீஸ் பண்ணுங்க’.. பிரபல நடிகரின் ரசிகர்கள் கோரிக்கை..!
Author: Vignesh12 October 2022, 2:15 pm
சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குனரான விக்னேஷ் சிவன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். நானும் ரவுடி தான் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
நடிகை நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடி தான் படத்தின் போதுதான் இவருக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பின் ஏழு வருடங்களாக தீவிரமாக காதலித்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், இருவருக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதனைக்கேட்ட ரசிகர்கள் அது எப்படி திருமணம் ஆகி நான்கே மாதங்களில் குழந்தை பிறந்தது என கேட்டு வந்தநிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்தது என தெரிய வந்தது.
இதன் காரணமாக நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் தம்பதியினரை வைத்து தற்போது பல சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.
இதனிடையே, இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் AK62 படத்தை இயக்கவுள்ளார். இதனால், அஜித் ரசிகர் ஒருவர் விக்னேஷ் சிவனிடம் இதே போல வேகமாக AK62 படத்தையும் விரைவில் வெளியிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போது இந்த ட்வீட் செம வைரலாகி வருகிறது.