என்னாச்சு சிம்புவுக்கு இப்படி ஆகிட்டாரே; லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்;
Author: Sudha9 July 2024, 11:06 am
மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார் சிம்பு.
இந்நிலையில் உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வாயிலாக கோலிவுட் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குனராக அறிமுகமான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 48’ படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. சிம்பு இந்த படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கவும் ரெடியாகி வந்தார்.
இந்நிலையில் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
அதில் எஸ்டிஆர் முழுவதுமாக உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்த தேகத்தில் காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
எஸ்டிஆருக்கு என்னாச்சு? பிரேம்ஜி மாதிரி இருக்காரு எனக்கேட்டு சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோவிற்கு பல கமெண்ட்களை குவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.