மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் இப்படி ஆயிருச்சே.. கை முழுவதும் பலத்த காயங்களுடன் சமந்தா வெளியிட்ட புகைப்படம்..!

Author: Vignesh
28 February 2023, 4:00 pm

மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை.

samantha-updatenews360

ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

samantha-updatenews360

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள்.பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

Samantha - Updatenews360

விவாகரத்துக்கு பின் பல மாதங்களாக சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் கடுமையான வலியும் கஷ்டத்தையும் சந்தித்து வந்தார்.

சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டு வரும் சமந்தா இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். இதனிடையே, ஷூட்டிங்கில் கையில் ஏற்பட்ட காயத்தினை இணையத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

samantha - updatenews360
  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu