விஜய் மீது செருப்பு வீச்சு… மீண்டும் நடந்த அடுத்த சம்பவம் : வைரலாகும் வீடியோ!!
Author: Vignesh13 January 2024, 5:30 pm
லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.
குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் என மாறிமாறி பட பிடிப்புகள் நடந்து வருகிறது. GOAT படம் டைம் ட்ராவல் அடிப்படையில் தான், படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது. அதை பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் உறுதி செய்யும் வகையில் தான் இருந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் செல்பி எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், விஜய் தனது புது லுக்கில் ரசிகர்கள் உடன் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோ தற்போது வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
From the sets of #TheGreatestOfAllTime #Thalapathy @actorvijay na pic.twitter.com/ATibPtJB6k
— Jagadish (@Jagadishbliss) January 10, 2024
இந்நிலையில், விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது, நடிகர் விஜய் மீது கூட்டத்தில் இருந்து செருப்பு வீசப்பட்டது. விஜய் அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் அவர் மீது செருப்பு எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகிய வைரலாகி இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
This is unwanted things at funeral. pic.twitter.com/DQANBcToSB
— T J V? (@TrollJokarVijay) December 28, 2023
அன்று செருப்பு வீச்சு, இன்று விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அன்பு மாலை என கூறி தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கிருந்த ரசிகர்கள் சிலர் விஜய் மீது பூக்களை தூவினார்கள். அந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
#TheGOATshootingdiaries pic.twitter.com/P9t1BXhpze
— venkat prabhu (@vp_offl) January 13, 2024