‘நா ரெடி’ பாடல் அந்த பாடலின் காப்பியா?.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!
Author: Vignesh21 June 2023, 12:30 pm
தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியானது. இதை அடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் பிறந்தநாளுக்கு இப்படத்தில் இடம்பெறும் ‘நா ரெடி’ என்ற பாடல் ஜூன் 22ம் தேதி வெளியிடப்படும் என புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்திருந்தது.
அதையடுத்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் 20 செகண்ட்ஸ்க்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ‘நா ரெடி’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் குரலில் சினம் கொண்ட சிங்கத்த சீண்டாதப்பா என்ற வரிகள் வேற லெவல் எனர்ஜியை கொடுக்கிறது. ரசிகர்கள் கொண்டாடடி வருகின்றனர்.
இதோ அந்த ப்ரோ
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடலும் விஜய் பாடிய நா ரெடி பாடலும், ஒரே மாதிரி இருக்கிறது என்று நெட்டிசன்கள் நா ரெடி பாடலை ட்ரோல் செய்து வருகின்றனர்.
Sync ?? #VidaaMuyarchi #AjithKumar pic.twitter.com/nbOvk9nEKA
— Valimai Pandees ? (@valimaipandees) June 20, 2023