விஜய்யுடன் இப்படியொரு நெருக்கம்..? புத்தாண்டு புகைப்படத்தால் ரசிகர்களிடம் மாட்டிகொண்ட ராஷ்மிகா..!

தெலுங்கு திரையுலகில் இளம் கதாநாயகனாக அறிமுகமாகி, ஏராளமான ரசிகைகளை கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. பல வெற்றி படங்களில் நடித்த இவர், நோட்டா படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தற்போது லிகர், குஷி, ஜன கன மன உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், ராஷ்மிகா மந்தனா உடன் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின.

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடியாக நடித்ததால், இவர் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து எந்தவித பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த இவர்கள், கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களுக்கு பின் ஜோடியாக நடிப்பதை தவிர்த்து வந்தனர்.

இருப்பினும் இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி, இவர்கள் குறித்த காதல் சர்ச்சையை மேலும் பரபரப்பாக்கியது.

ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜோடியாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றதாக கூறப்பட்டது. அப்போது மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் விஜய் தேவரகொண்டா ஒரு புகைப்படத்தை கூட பதிவிடவில்லை. இருப்பினும் ராஷ்மிகா பதிவிட்ட புகைப்படத்தில் அவர் விஜய் தேவரகொண்டாவின் கண்ணாடியை அணிந்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து சொல்லி, விஜய் தேவரகொண்டா பதிவிட்ட புகைப்படம், ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும், மாலத்தீவுக்கு ஜோடியாக சென்றதை உறுதிசெய்யும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். கையில் சரக்கு பாட்டிலுடன் நீச்சல் குளத்தில் குளித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

இது தற்போது எடுத்த புகைப்படம் இல்லை என்றும், கடந்த அக்டோபர் மாதம் ராஷ்மிகா உடன் மாலத்தீவு சென்றபோது எடுத்த புகைப்படம் என்றும் நெட்டிசன்கள் சுட்டிகாட்டி உள்ளனர். அதுமட்டுமின்றி ராஷ்மிகா அப்போது பதிவிட்ட புகைப்படமும், விஜய் தேவரகொண்டாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தின் பின்னணியும் ஒரே மாதிரி இருப்பதை சுட்டிக்காட்டி, மண்ட மேல இருக்க கொண்டய மறந்துட்டீங்களே பாஸ் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

1 day ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

1 day ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

1 day ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

1 day ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

1 day ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

1 day ago

This website uses cookies.