பெத்தவங்க மேலயே கேஸ் போட்டவன்தானடா நீ.. விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
Author: Vignesh3 February 2024, 2:44 pm
நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இறக்கை கட்டி பறந்தது. ஆனால் சிலரோ அவர் கட்சி எல்லாம் தொடங்கி தேர்தலை சந்திக்க மாட்டார், ரஜினி போல
சும்மா பேசி விட்டு கடைசி நேரத்தில் ஒதுங்கி விடுவார் என்று கிண்டலாகவும் விமர்சித்தனர்.
இந்த வாதம் முற்றிலும் தவறானது, என்பதை உணர்த்தும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை நடிகர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதியான நேற்று வெளியிட்டு இருக்கிறார்.

அவருடைய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல்தான் பிரதான இலக்காக இருக்கும் என்பதை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதேபோல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் வெளிப்படையாக
குறிப்பிட்டு இருக்கிறார்.
1984ல் வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஜய் சுமார் 30 ஆண்டுகளுக்கு கழித்து ஏறக்குறைய அதே பெயர் வரும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தனது கட்சிக்கு சூட்டியிருப்பதுதான்
இதில் ஆச்சரியமான விஷயம்.

இந்நிலையில், விஜய் வெளியிட்ட அறிக்கையில் என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர் புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதை எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பம் ஆகும்.
“எண்ணித் துணிக கருமம்” என்பது வள்ளுவன் வாக்கு அதன்படியே, தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று விஜய் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு நெட்டிசன்கள் என்னது… என் தாய் தந்தைக்கு அடுத்து, தமிழக மக்களுக்கு முழுமையாக உதவ வேண்டுமா? உங்க அம்மா, அப்பா மேலயே கேஸ் போட்டவன் தானே நீ என்று கருத்துக்களை கண்டமேனிக்கு பதிவிட்டு வருகின்றனர். தன் பெயரை பயன்படுத்தி கூட்டம் நடத்தக் கூடாது என தந்தை மற்றும் தாய் உள்ளிட்ட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.