ரவீந்தர் சந்திரசேகரன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருப்பதை பார்த்தவர்கள், இதெல்லாம் மனைவி மகாலட்சுமி வந்த நேரம் என்கிறார்கள்.
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும், டிவி நடிகையான மகாலட்சுமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணம் முடிந்ததில் இருந்தே அவ்வப்போது தன் மனைவியுன் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ரவீந்தர்.
இந்நிலையில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரவீந்தர் கூறியிருப்பதாவது,
கலைமாமணி ஞான சம்பந்தம் சாருடன் என் முதல் பட்டிமன்றம். என் அணி வென்றது. என் பேச்சுக்கு நிறைய பாராட்டு கிடைத்தது. என் அம்மாவின் ஆசி மற்றும் பொண்டாட்டியின் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, எல்லாம் மகாலட்சுமி வந்த நேரம் சார். வாழ்த்துக்கள். நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அந்த பட்டிமன்றம் எப்பொழுது ஒளிபரப்பாகும். பார்க்க ஆவலாக இருக்கிறோம் என கூறியுள்ளனர்.
முன்னதாக மகாலட்சுமியுடன் சேர்ந்து வந்தாள் மகாலட்சுமியே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரவீந்தர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒரு டப்பா அல்வாவை ரவீந்தரின் கையில் கொடுத்தார்கள். அதை பார்த்த ரவீந்தரோ, நான் சுவைத்த இனிப்புகளில் மகாலட்சுமியை விட கம்மி தான் இந்த அல்வா என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.
அய்யோ அந்த ரவீந்தர்லாம் மனைவியை எப்படி பாராட்டுகிறார் பாரு, நீயும் தான் இருக்கியே என சில வீடுகளில் புகைச்சலாம்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.