அதுக்குள்ள 2 வயசு ஆகிடுச்சா? மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பரீனா!

Author: Shree
17 November 2023, 7:12 pm

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை பரீனா அசாத். இவர் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீடியா உலகில் வளர்ந்து வந்தார். அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற பல நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார்.

அதன் பின்னர் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது பாரதி கண்ணம்மா சீரியல் தான். ஒரு வில்லி இந்த அளவுக்கு பிரபலம் ஆனது என்றால் அது ப்ரீனா தான்.

இவர் தனது நீண்ட நாள் காதலரான ரஹ்மான் உபைத் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவ்வப்போது மகனுடன் அழகான புகைப்படங்களை வெளியிடுவார். அந்தவகையில் தற்போது மகனின் இரண்டாவது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?