வீட்டுக்கு தெரியாம கமல் கூட அத பண்ணப்போ.. செம அடி வாங்கினேன்.. – மனம் திறந்த வடிவுக்கரசி..!

Author: Vignesh
28 July 2023, 11:30 am

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். அத்துடன் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1979ல் வெளியான கன்னிப் பருவத்திலே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இப்படத்தில் வடிவுக்கரசி நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

vadivukkarasi-updatenews360

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். பின்னர் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவுக்கரசி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். குறிப்பாக ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தில் கிழவியாக நடித்து மிரட்டினார்.

vadivukkarasi-updatenews360

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயண அனுபவங்களை குறித்தும் வாழ்க்கையில் நடந்த பல சோகமான சம்பவங்களை குறித்து பேசிய வடிவுக்கரசி, என் கணவர் என்னை விட்டுவிட்டு கிராமத்திற்கு சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சில பிரச்சனையால் அந்த குழந்தையை ஹாஸ்டலில் சேர்த்தார்கள். இது எனக்கு தெரியவந்ததும் நானே அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கினேன். இன்று அவள் அமெரிக்காவில் குடும்பத்தோடு நல்ல வசதியாக வாழ்கிறாள் என வடிவுக்கரசி கூறியுள்ளார்.

vadivukkarasi-updatenews360

மேலும் 1987 பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் வடிவக்கரசி தன்னுடைய இருபதாவது வயதில் நடிகையாக அறிமுகமானார்.

vadivukkarasi-updatenews360

தன் அப்பா தூர்தர்ஷனில் பணியாற்ற வைத்ததாகவும், அப்போது கண்மணி பூங்காவில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்வதை பார்த்து பாரதிராஜா இயக்கத்தில் ஒரு படத்திற்கு ஆடிசனுக்கு அப்பாவுக்கு தெரியாமல் சென்ற சமயத்தில் சிவப்பு ரோஜாக்கள் படத்தில் அல்ட்ரா மாடலான சித்ரா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வந்ததாகவும், இப்படி நடிக்கப்போனபோது தன் அப்பாவுக்கு தெரியாது என்றும், சிகப்பு ரோஜாக்கள் படத்தில் பேட்ச் ஒர்க் நடந்தபோது தன் அப்பாவிடம் வடிவுக்கரசின் ஒரு பொண்ணு நடிக்கிறார் என்று சிலர் போட்டோவை காட்டி, உங்களுடைய மகள் மாதிரியே இருக்கிறாள் என்று கூறியுள்ளார்கள்.

vadivukkarasi-updatenews360

அப்போது, தன் தந்தை கன்னிமாராவில் தன் பெண் வேலை செய்கிறாள் என்று சொல்லி சமாளித்து விட்டதாகவும், பின்னர் தன்னிடம் வந்து சினிமாவில் நடிக்கிறியா என்று கேட்டு தன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டதாகவும், சினிமாவில் வேலை செய்கிறாயா என்று கண்டுபிடித்து பெரிய சண்டையே நடந்து விட்டதாக வடிவுகரசி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

vadivukkarasi-updatenews360

அதன் பின்னர்தான் பாலமுருகன் என்பவர் தன் அப்பாவிடம் காம சாஸ்திரம் என்ற படத்தில் ஜெய்சங்கருக்கு தங்கச்சியாக உங்கள் மகள் நடிக்கணும் என்று கேட்டிருந்ததாகவும், வேண்டவே வேண்டாம் என்று சொல்லி பின்னர் ஏணிப்படிகள் என்ற படத்தில் நடிக்க வைத்ததாகவும் தன் அப்பா குறித்து வடிவுக்கரசி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 769

    6

    0