“என்ன பிராண்ட் கா*** யூஸ் பண்றீங்கனு கூட கேப்பீங்களோ”.. கொந்தளித்த பாத்திமா பாபு..!

Author: Vignesh
13 May 2023, 11:04 am

பாத்திமா பாபு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையும், செய்தி வாசிப்பாளரும் ஆவார். இவர் பாபு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

தூர்தர்சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சியில் ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். மின்னலே, திருத்தனி, பத்ரி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர்.

fathima babu-updatenews360

இவர் முன்னாள் முதல்வர் செயலலிதா அ.தி.மு.கவின் தலைமையிடத்தில் இருந்தபோது அக்கட்சியில் இணைந்தார். இவருடன் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமியும் இணைந்தார். இவர்களை அதிமுகவின் தலைமைப் பேச்சாளர்களாக 2013 இல் செயலலிதா நியமித்திருந்தார்.

fathima babu-updatenews360

தற்போது பாத்திமா பாபு சொந்தமாக அவர் youtube சேனல் நடத்தி வருகிறார். தற்போது அந்த சேனலில் கதைகள், சமையல் வீடியோக்கள் ஆகியவற்றை அவர் பதிவிட்டு வருகிறார். இவர் ஹிந்துவை திருமணம் செய்து இருந்தாலும் அவரது மகன்களுக்கு இஸ்லாமிய பெயர் தான் வைத்து இருக்கிறார்.

fathima babu-updatenews360

இதனிடையே, ஒரு நபர் பாத்திமா பாபுவின் பேஸ்புக் பக்கத்தில் ‘உங்க ஆத்துக்காரர் ஹிந்து தானே.. ஒரு ஹிந்து பெயர் கூட குடும்பத்தில் இல்லையே பாத்திமா மேடம்’ என ஒரு நபர் கமெண்டில் கேட்க, பதில் கொடுத்த பாத்திமா ‘ஒரு ஹிந்துவை நிக்கா பண்ணிகிட்டதால.. பண்ணது நிக்கா.. பள்ளி வாசல்ல’ ஸோ பொத்திகிட்டு போகவும்’ என தெரிவித்து உள்ளார்.

fathima babu-updatenews360

மேலும், “பொது மேடைல என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கனு கூட கேப்பீங்களோ” என பாத்திமா கோபமாக தெரிவித்து இருகிறார்.

fathima babu-updatenews360
  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 766

    0

    0