பாட்டல் ராதா, வணங்கான், காதலிக்க நேரமில்லை உள்பட பல படங்கள் இந்த வாரம் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
சென்னை: இந்த வாரம் தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில் சுடச்சுட திரைப்படங்கள் ஓடிடிக்கு வருகின்றன.
பாட்டல் ராதா: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், அவரது உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் வெளியான திரைப்படம், பாட்டல் ராதா. இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை (பிப்.21) ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.
வணங்கான்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் வணங்கான். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியான இப்படத்தில் அருண் விஜய், ரித்தா, ரோஷினி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
காதலிக்க நேரமில்லை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ரவி மோகன், நித்யா மேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களை பேசிய இப்படம் நாளை நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
ஆபிஸ்: வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இணையத் தொடர்தான் ஆபிஸ். இந்தத் தொடர் ஜியோ ஹாட் ஸ்டாரில் நாளை வெளியாகவுள்ளது.
டாகு மகராஜ்: பாலையா என ரசிகர்களால் அழைக்கப்படும் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்துள்ள தெலுங்குப் படமான டாகு மகராஜ், நாளை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிகள் சர்ச்சையிலும் சிக்கியது.
இதையும் படிங்க: திமுக கவுன்சிலர் மீது காரித்துப்பிய திமுக செயலாளர்.. கடலூர் கூட்டத்தில் பரபரப்பு!
சாட்சி பெருமாள்: வி.பி. வினு இயக்கத்தில், அசோக் ரங்கராஜன் நடித்து வெளியான திரைப்படம் சாட்சி பெருமாள். இந்தத் திரைப்படம், நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மேலும், மார்க்கோ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்திலும், மதுரை பையனும் சென்னை பொண்ணும் என்ற வெப் தொடர் ஆஹா தமிழ் ஓடிடியிலும் வெளியாகின்றன.
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
This website uses cookies.