வாந்திதான் வந்துச்சு… விக்ரமுடன் Lip Lock காட்சி குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்..!!

Author: Babu Lakshmanan
12 April 2022, 2:37 pm

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் கவர்ச்சி என்பது மறைமுகமான ஒன்றாகத்தான் இருந்தது. அதாவது, ஹீரோ, ஹீரோயின்களின் முதலிரவு காட்சி மற்றும் வில்லன் பெண்களை கற்பழிப்பது, முத்தக்காட்சிகள் போன்றவரை வரும் போது, சொம்பு உருண்டுவதும், கடல் அலைகள் உறைந்து நிற்பது, பூக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி நிற்பது போன்றவையே காண்பிக்கப்பட்டு வந்தது.

ஆனால், நாகரீகம் மாற மாற முத்தக்காட்சிகள், பிகினி ஆடைகள் என்பதெல்லாம் தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது.

Billa (2007)

இதற்கு முக்கியக் காரணம், ஒரு படத்தில் நடித்தால் கிடைக்கும் ஊதியத்தை விட, ஒரு குறிப்பிட்ட பாடலுக்கோ, காட்சிக்கோ கிளாமராக நடித்துச் சென்றால், அதனை விட கூடுதலாக சம்பளம் கிடைக்கும் என்பதுதான்.

ஒரு சில நடிகைகள் இதுபோன்ற கிளாமர் காட்சிகளையும், முத்தக்காட்சிகளையும் ஏற்று நடிக்கின்றனர். ஆனால், ஒரு சிலர் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் கட்டாயத்தின் பேரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படியிருக்கையில், பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரம், தனது படத்திலும் சரி, நடிகைகளுடனும் சரி கிளாமரை எதிர்பார்க்க மாட்டார் என்பதுதான் நிஜம். ஆனால், நடிகர் விக்ரமுடன் நடித்த முத்தக் காட்சியின் போது வாந்தி தான் வந்ததாகக் கூறி பகீர் கிளப்பியுள்ளார் பிரபல நடிகை ஐஸ்வர்யா.

சாந்தா மீனா என்ற நிஜப் பெயரைக் கொண்ட இவர், பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் ஆவார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்த ஐஸ்வர்யா, தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என இரு மொழி படங்களிலும் நடிகையாக நடித்து இருக்கிறார்.பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் மிரட்டி வருகிறார்.

Aishwarya Bhaskaran Age, Height, Weight, Body, Wife or Husband, Caste,  Religion, Net Worth, Assets, Salary, Family, Affairs, Wiki, Biography,  Movies, Shows, Photos, Videos and More

மேலும், சீரியல்களிலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலையை காட்டி வரும் ஐஸ்வர்யா, பிரபல தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் பங்கேற்றார்.

அண்மையில் மீரா படத்தில் விக்ரமுடன் நடித்த போது லிப் கிஸ் காட்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- 1992 ஆம் ஆண்டு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மீரா. இந்த படத்தில் நானும், விக்ரமும் நடித்து இருந்தோம். அப்போது தான் அந்த கிஸ்ஸிங் சீன் எடுக்கப்பட்டது. உண்மையில் சொல்லப்போனால் மிகக் கொடூரமாக இருந்தது. அது ரொமான்ஸ் கிஸ் கிடையாது. வீனஸ் ஸ்டுடியோவில் முழங்கால் அளவில் தண்ணீர் இருக்கும். அதில் டெக்னிசியன், கேமராமேன் எல்லோரும் கால்லை வைத்து இருப்பார்கள். அந்த தண்ணியில் விக்ரம் என்னை முக்கி எடுத்து ஒரு ஆத்திரத்தில் கோபத்தில் கொடுக்கிற மாதிரி முத்தக்காட்சி.

அப்போது எனக்கு வாயில் தண்ணீர், விக்ரமுக்கு மூக்கில் தண்ணீர் ஏறி ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதில் எங்களுக்கு ரொமான்ஸ் எங்க இருந்து வரும் வாந்தி தான் வந்தது. எப்படியோ அந்த காட்சியை எடுத்து முடித்தது. ஆனால், அது ரொம்ப கஷ்டமான ஒன்றாக இருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் நானும் விக்ரமும் பயங்கரமாக சண்டை போடுவோம். நான் கெனி என்று தான் விக்ரமை கூப்பிடுவேன். ஆரம்பத்தில் பயங்கர சண்டை போடுவோம். மீரா படம் எடுக்கும் போது எனக்கும் கெனிக்கும் ஆகவே ஆகாது.

கீறி,பாம்பு மாதிரி ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருப்போம். செட்டில் உள்ள எல்லோருமே சமாதான படுத்துவார்கள். அந்த அளவிற்கு இரண்டு பேருக்குமே செட்டாகாது. அப்படி இருக்கும்போது தான் இயக்குனர், நீங்கள் இப்படி இருந்தால் படம் ஒழுங்காக வராது. தயவுசெய்து பெஸ்ட் நண்பர்களாக இல்லை என்றாலும் நண்பர்களாக கை கொடுத்துக் கொள்ளுங்கள் என்று சமாதானப்படுத்தினார். அதற்குப் பிறகு ஒரு நாள் ஷூட்டிங்கில் கொடைக்கானலில் சமைக்கும்போது கெனியும் நானும் பேச ஆரம்பித்தோம்.

This Video From Akhilandeshwari Of Chembarathi Is Surely Going To Surprise  You! - Zee5 News

அப்போது எங்களுக்குள் நட்பு உருவானது. அதற்கு பிறகு நாங்கள் சண்டை போடவில்லை. பின் பல வருடம் கழித்து கெனியை சந்தித்தேன். அப்போது அவருக்கும் குழந்தைகள் இருந்தது, எனக்கும் குழந்தை இருந்தது. அந்த சமயத்தில் கெனி நம்ப ரெண்டு பேரும் சண்டை போடவே இல்லை பார்த்தியா? என்று கேட்டார். எனக்கு சிரிப்புதான் வந்தது. அப்போது எனக்கு 19 வயது, இப்ப ஒரு குழந்தைக்கு அம்மா மெச்சூரிட்டி இருக்கிறது என்று பேசினோம். இதையெல்லாம் மறக்க முடியாது, என்று கூறினார்.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 2209

    17

    7