இந்த மாதிரி சீன் விஜய் படத்துல வருவது வருத்தம்.. ‘வாரிசு’ படத்தை வறுத்தெடுக்கும் பெண்கள்
Author: Udayachandran RadhaKrishnan15 January 2023, 6:00 pm
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் பெண்களை அடிமை போல காட்டியுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகைகள் என்றாலே வெறும் பாட்டிற்கு மட்டும் தான் என்ற நிலை இருந்து வருகிறது. சமீப காலமாக தான், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கதை, நடிகைகளுக்கும் சம அளவு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரம் என தற்போது தான் கொஞ்சம் மாறி வருகிறது. ஆனால், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களிலேயே சில அபத்தமான காட்சிகள் வருகிறது என பெண்கள் ஆதங்கம் கொண்டுள்ளனர்.
வாரிசு படம் குறித்து சில பெண்களிடம் கருத்து கேட்ட போது, சிலர் கோபமாக, ‘பெண்கள் ஒன்றும் அடிமைகள் இல்லை. ஆண் எந்த தவறு செய்தாலும் கண்டுக்கொள்ளாமல், அவனுடன் சகித்து கொண்டு வாழ வேண்டுமா, இப்படியான காட்சிகளை விஜய் போன்ற நடிகர்கள் படங்களில் வருவது வருத்தம்’ என தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.