கடுப்பான அஜித்… மன உளைச்சலில் தவிக்கும் பிரபல இயக்குநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2023, 7:41 pm

நடிகர் அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீசாகி மெகா ஹிட் அடித்துள்ளது. அஜித் பட வரிசையில் இது நல்ல வசூலை பெற்று தந்துள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குகிறார் என்ற அறிவிப்பு முன்கூட்டியே வெளியாகியிருந்தது. விக்னேஷ் சிவன் தான் இயக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், அது உறுதியாகாமல் உள்ளது.

விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு எளிதாக அமைந்தாலும், கடந்த வாரம் அஜித் தன் அடுத்த படத்தின் இயக்குனரை மாற்றிவிட்டார்.

இது விக்னேஷ் சிவனுக்கு கடும் மன உளைச்சல் கொடுத்தாலும், அவரின் நடத்தை தான் இதற்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

கடந்த வருடம் நயன்தாராவுடன் திருமணம், இரட்டை குழந்தைகளுக்கு தந்தை என ஏகப்பட்ட குஷியில் இருந்து விக்னேஷ் சிவனுக்கு இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து கஷ்ட காலம்தான் போல என புலம்பி வருகிறார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?