தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் படிக்க: “ரங்கு ரக்கர” பாடலுக்கு என்னவொரு குத்து.. படு கவர்ச்சியான உடையில் ஷிவானி நாராயணன்..!(Video)
1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது, சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் குஷ்பு, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். 53 வயதாகும் குஷ்பு உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறியது ரசிகர்கள் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் படிக்க: ஆள விடுங்கடா சாமி என்று தெறித்து ஓடிய 22 வயது நடிகை.. 40 வயது நடிகையுடன் குத்தாட்டம் போடும் விஜய்..!(Video)
இந்நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பிரமோஷன் பேட்டியில் கலந்து கொண்ட சுந்தர் சி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், ஒன்றாக பிரபல நடிகையால் தனக்கும் தனது மனைவிக்கும் இடையே வெடித்த சண்டையை பற்றி கூறியுள்ளார். இதில், சுந்தர் சி யின் மனைவி குஷ்பூ தனக்கு பிறக்கப் போகும் மகளுக்கு மாளவிகா என்னும் பெயரை சூட்ட வேண்டும் என ஆசையோடு இருந்துள்ளார்.
இதை தனது கணவரிடமும் கூறியுள்ளார். இந்த சமயத்தில், படத்தின் பாடல் அமைக்க இசையமைப்பாளர் தேவாவின் ஸ்டுடியோவிற்கு சுந்தர் சி சென்றுள்ளார். அப்போது, கதாநாயகியின் பெயரில் இந்த பாடலை அமைத்துள்ளார் தேவா. ஆனால், சரியான பெயர் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், மாளவிகா என்ற பெயரை இசை அமைப்பாளர் தேவாவிடம் கூறியுள்ளார் சுந்தர் சி. அவர் அட இது நல்லாருக்கே என கூறி மாளவிகா பெயரிலே பாடலையும் அமைத்துள்ளார் தேவா.
மேலும் படிக்க: கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாய்ப்பை விடாத விஜய்..!
அதன் பின்னர், அப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமான நடிகையின் பெயர் மாளவிகாவாக மாறிவிட்டது. இப்படத்திற்கு, பின் மாளவிகாவும் தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். தனது மகளுக்கு வைக்க வேண்டும் என குஷ்பூ தேர்ந்தெடுத்து வைத்திருந்த பெயரை கதாநாயகிகைக்கு வைத்ததால் நடிகை குஷ்பூவுக்கும் சுந்தர் சிக்கும் இடையே சண்டை வந்து கடுப்பில் திட்டிவிட்டாராம். இதை நகைச்சுவையாக அந்த பேட்டியில், இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி பகிர்ந்து கொண்டார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.