விஜய் பாணியை பின்பற்றும் சூர்யா.. சைலண்டா வேலைய பார்த்த ஜோதிகா..!

Author: Vignesh
30 March 2023, 3:00 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்தி அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

surya

சமீபத்தில் தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி மனைவி குழந்தைகளுடன் தனி குடித்தனம் சென்றுவிட்டார். இந்நிலையில் மீண்டும் ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கியுள்ளாராம்.

இந்த பிளாட் 9,000 சதுர அடி வரை இருக்கிறதாம். இதில் கார்டன் மட்டும் கார் பார்க்கிங் வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதெல்லாம் ஜோதிகா கொடுத்த மாஸ்டர் பிளான் தானாம். அவரது சொந்த ஊர் மும்பை என்பதால் தான் கணவரை அங்கேயே கூட்டிச்சென்றுவிட்டாராம்.

jyothika-surya updatenews360

இதனிடையே, நடிகர் சூர்யாவின் 42 வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படம் பிரமாண்ட தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது.

மேலும், சூர்யா மும்பையில் குடியேறியது அவரின் தந்தை சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகிறது. இதனிடையே, இவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக ஜோதிகா பல படங்களில் பிஸியாக நடித்து வருவது சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என்று முன்னதாக, பத்திரிகையாளர் பயில்வான் தெரிவித்துள்ளார்.

ajith

இதனிடையே, விஜய்க்கும் அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையை போல தற்போது சூர்யாவுக்கும் சிவகுமாருக்கு சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 810

    5

    1