சீன் பேப்பரை முதல் நாளே கொடுத்துடுங்க.. விஜய் – வெங்கட் பிரபு இடையே பஞ்சாயத்துடன் ஆரம்பமான ஷூட்டிங்..!

Author: Vignesh
1 January 2024, 11:13 am

லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் என மாறிமாறி பட பிடிப்புகள் நடந்து வருகிறது. தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. தற்போது, தளபதி 68 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கும் வெங்கட்ரவுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Vijay - Updatenews360

அதாவது இன்று என்ன காட்சி எடுக்கப் போகிறீர்களோ அந்த கட்சியின் சீன் பேப்பரை அதற்கு முதல் நாளே விஜய் இடம் கொடுக்க வேண்டுமாம். ஆனால், வெங்கட் பிரபு அப்படி செய்யாமல் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து சில விஷயங்களை மாற்றி இருக்கிறார். இதனால், கோவம் அடைந்த விஜய் இன்று என்ன எடுக்கிறோமோ அந்த சீன் பேப்பரை முதல் நாளே கொடுத்து விடுங்கள் என்று கோபத்துடன் கூறி சென்று விட்டாராம்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 462

    0

    0