லோகேஷ் உடன் விஜய் மோதல்… நடந்தது என்ன? அதிர்ந்துப்போன தயாரிப்பாளர்!

Author: Shree
6 October 2023, 8:20 pm

தமிழ் சினிமா திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் இளைய தளபதி விஜய். இவர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் என்றாலே, அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். அதில் முதல் விருந்தாக விஜய் நடித்து வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படத்திற்கான ஆடியோ லான்ச் என்றாலே, விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும், அரசியல் வட்டாரத்தில் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களும் பெரும் பிரபலமானவை அப்படியாக பேசப்பட்டு வந்தது.

தற்போது வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் வெள்ளி திரையில் வரவிருக்கும் லியோ திரைப்படத்திற்கு பாதுகாப்பு நலன் கருதி, ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனிடையே நேற்று படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான ரசிகர்கள் கவனத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு இடையே ஷூட்டிங்கின் போது மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் அவர்கள் பேசிக்கொள்வதே இல்லை என்றும் விஜய்யிடம் வேலை சார்ந்து ஏதேனும் டிஸ்கஷன் செய்யவேண்டும் என்றால் கூட லோகேஷின் அசோசியேட் ரத்னகுமார் தான் கலந்தாலோசித்து வருகிறார் என்றும் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரிடம் கேட்டதற்கு “அதெல்லாம் சுத்த வடிக்கட்டின பொய்” என்று வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 443

    0

    2