நாங்கதான் மெட்ராஸ்; ஜி மோகனுக்கு ஆதரவாகப் பேசிய வெற்றிப்பட இயக்குனர்

Author: Sudha
23 July 2024, 4:48 pm

சமீபத்தில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது நினைவேந்தல் பேரணியில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித் மெட்ராஸ்னா நாங்க தான் என்று கருத்து சொல்லி இருந்தார்

இதற்கு பதில் அளிப்பது போன்று இயக்குனர் மோகன் ஜி “என்னடா படத்துல வர டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்கீங்க மெட்ராஸ்னா நாங்க தான் அப்படின்னு சொல்றீங்க அப்ப நாங்க எல்லாம் யாருடா ” என்று ஒரு பதிவை போட்டிருந்தார்.

இந்த பதிவை குறித்து அஜித்,விஜய்,பரத் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பேரரசுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இயக்குனர் பேரரசு மெட்ராஸ்னா நாங்கதானு சொன்னாரா?மெட்ராஸ் படம் வேணும்னா அவரோடதா இருக்கலாம் ஆனா மெட்ராஸ் அவரோடது கிடையாது.

மெட்ராஸ்ல தமிழ்நாட்டுல இருக்கிற எல்லோருக்கும் பொதுவானது.எல்லா ஊர்ல இருந்தும் மக்கள் வந்து வாழ்ந்துட்டு இருக்காங்க.நானும் நாட்டரசன் கோட்டையில் இருந்துதான் வந்து இருக்கேன்.மெட்ராஸ் எல்லாருக்கும் பொதுவானது தான்.

மோகன் ஜி என்ன பதில் சொன்னாரு மெட்ராஸ்னா நாங்கதான் அப்படின்னு சொல்றீங்க..அப்ப நாங்க எல்லாம் நாங்க எல்லாம் யாருன்னு கேட்டு இருக்காரு.. அவர் கேட்டது சரியான கேள்வி தான் என்று பேரரசு தெரிவித்தார்.

  • Vanitha Talked About his marriage and Reply to haters நான் 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. என்னால முடியும்.. உங்களுக்கென்ன? வனிதா அதிரடி!