“இங்கு மிருகங்கள் வாழும் இடம்”… திரைப்படமாகும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம்..!

Author: Vignesh
5 May 2023, 5:30 pm

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, காணொளி எடுத்து பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து, படம் ஒன்று உருவாகி உள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்தது. இந்த சம்பவம் நாட்டையே, அதிர்ச்சி அடையவைத்தது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை மையமாக வைத்து “இங்கு மிருகங்கள் வாழும் இடம்” என்ற தலைப்பில் படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தை எஸ்.சசி குமார் என்பவர் இயக்குகிறார்.

ingu mirugangal vazhum idam-updatenews360

இதில் பைன்ஜான், அஸ்மிதா, ஶ்ரீதேவி உன்னிகிருஷ்ணன் என பலரும் நடிக்கிறார்கள். இந்த படம் விரைவில் திரையரங்களில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?